(நூருல் ஹுதா உமர்)
பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கூட்டாக போராடி, அதன்பயனாக கொளுத்த சம்பள அதிகரிப்புக்களையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுவிட்டு, கூட்டாக போராடிய ஏனைய ஊழியர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு, கைவிடப்பட்டவர்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் ஒரு வார்த்தையேனும் பேசாது, கல்விசார் அணியினர் வாய்மூடி மௌனிகளாக இருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தெரிவித்தார்.
சூழலில் மாணவர்கள் கூட கருத்து எதனையும் கூறவில்லை. பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காது இருப்பதனூடாக அரசுக்கு அழுத்தங்களை மாணவர்களும் கல்விசார் தரப்பினரும் வழங்குவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கும் இந்த சந்தர்ப்பத்தில் கல்விசார் தரப்பினர் சூம் தொழினுட்பத்தினூடாக தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது எங்களது போராட்டத்தை மலினப்படுத்தும் செயல்களில் ஒன்றாகவே நாங்கள் கருதுகிறோம்.
Post a Comment
Post a Comment