கலைமகளில் களைகட்டிய கணிதப் பூங்கா திறப்பு விழா!





( வி.ரி.சகாதேவராஜா)

 சம்மாந்துறை வலய நாவிதன்வெளிக் கோட்டத்தில் உள்ள வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய கணிதப் பூங்கா வித்தியாலய அதிபர் கே. தியாகராஜா தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது .

கல்வி அமைச்சின் ஜெம்(  Gemp)  திட்டத்தின் கீழ் 3அரை லட்ச ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பூங்காவை, பிரதம அதிதியாக கலந்து கொண்ட சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்எச்எம். ஜாபீர் திறந்து வைத்தார் .

கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான பீஎம்வை.அரபாத் , பி.பரமதயாளன், எச் .நைரூஸ்கான், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா, பாடசாலை இணைப்பாளர் எஸ்.மோகன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும், விசேட அதிதிகளாக 
 முன்னாள் அதிபர்களான என். பிரபாகர் , கே.பேரானந்தம், பாடசாலை அபிவிருத்திச்  சங்க செயலாளர்
கே .மதிவண்ணன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

 மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கணித பூங்காவில் காட்சிப் படுத்தப்பட்ட கணித உருக்களுக்கான விளக்கங்களை மாணவர்கள் சிறப்பாக விபரித்தார்கள்.

புதிய அதிபர் கே. தியாகராஜாவின் காத்திரமான அர்ப்பணிப்பான சேவை பற்றி வாழ்த்துரைகள் வழங்கப்பட்டன.

பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக பாடசாலைக் கீதம் ஓடியோ வடிவில் தயாரிக்கப்பட்டு பணிப்பாளர் ஜாபீரினால் அங்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

 பிரதி அதிபர் எம். தர்மலிங்கம் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிகளை உப அதிபர் எஸ்.நடனசபேசன் நெறிப்படுத்தி தொகுத்து வழங்கினார்.

ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் விரும்பிகள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.