சிறைக்காவலரை கொல்ல கைதியை ஒப்பந்தம் செய்த சக சிறைக்காவலர்




 


காலி சிறைச்சாலையின் பெண் சிறைக்காவலர் ஒருவர் அதே சிறைச்சாலையில் பெண் சிறைக்காவலர் ஒருவரை கொலை செய்ய ஒப்பந்தம் வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸ் முறைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது.

 

பல்வேறு குற்றச் செயல்களுக்காக காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதி ஒருவருக்கே சிறைச்சாலை அதிகாரி இந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சிறைக்காவலரைக் கொல்வதற்கான ஒப்பந்தத்தை சிறைக்காவலர் தனக்கு வழங்கியதாக அந்தப் பெண் மற்றொரு பெண்ணிடம் கூறினார்.

 

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.