சமாதான நடை பவனி!




 


( வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறையில் இனங்களுக்கிடையிலான சமூக ஒற்றுமை தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.


 சமாதானம் சமூகப்பணி நிறுவனம் வரப்பத்தான்சேனை சந்தியில் இருந்து இறக்காமம் கலாசார மண்டபம் வரை ஊர்வலமாக இத்தினத்தை முன்னெடுத்தது.
பதியத்தலாவ,இறக்காமம், தமன,நிந்தவூர், காரைதீவு,ஆகிய பிரதேச நல்லிணக்க குழுக்கள் கலந்து கொண்டன.

அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேத. ஜெகதீசன்,
சமாதானமும் சமூகப் பணியும் நிறுவனத்தின் பணிப்பாளர் த.தயாபரன்,  
த.ராஜேந்திரன், ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.

மூவின மக்களும் நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தினையும் மக்களிடையே எற்படுத்த வேண்டும். என்பதற்காக இச் சமூக வேலைத் திட்டத்தினை முன்னெடுக்கப்பட்டது.

 சமூகங்களுக்கிடையில் சகவாழ்வை கொண்டு வருமுகமாக
தமிழ்,முஸ்லீம், பெளத்தர்கள்  அனைவரும் இணைந்து சமாதான நடை பவனி இன்று  இடம்பெற்றது.

இறக்காமம் கலாசார மண்டபத்தில் நான்கு மதங்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தது.
 
இதனுடாக சமூகங்களுக்குடையில் தப்பான எண்ணங்களை அகற்றி நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒருமித்த குரலில் பணியாற்றுவதற்கான செயற்ப்பாடாக அமைந்திருக்கின்றது.

இதிலே பல்லின சமூகங்களின் கலை கலாசாரங்களை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இலங்கையில் ஒற்றுமையான ஒரு அமைதியான சூழ்நிலையை கொண்டு வருவதே இவ் அமைப்பின் நோக்கமாகும் .