( எஸ்.அஷ்ரப்கான்)
பாதுகாப்பு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து பாடசாலை மட்டத்தில் சிறந்த ஒழுக்கமுள்ள ஆளுமையான தலைவர்களை உருவாக்கும் நோக்கில் உருவான பாடசாலையின் தேசிய மாணவச் சிப்பாய் படையணியில் ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலய பாடசாலையின் தேசிய மாணவச் சிப்பாய் படையணியைச் சேர்ந்த மாணவன் ஏ.என்.ஸராபத் இஸ்னி, பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக சார்ஜன்ட் நிலையில் இருந்து பதவியுயர்வு பெற்று (CQMS) (Company Quarter Master Sergeant) நிலைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.
பாடசாலையின் இணைப்பாடவிதான அபிவிருத்திச் செயற்பாடுகளின் மற்றுமோர் மைல்கல்லாக இச்சாதனை குறித்த பாடசாலைக்கு கிட்டியுள்ளது.
இம்மாணவனுக்கான பதவியுயர்வு வழங்கும் நிகழ்வு அம்பாறை 17 ஆவது படைப்பிரிவில் கடந்த 16/05/2024 அன்று கட்டளையிடும் அதிகாரியின் தலைமையில் நடைபெற்றது.
இம்மாணவனை ஊக்குவித்த, பல்வேறு வழிகாட்டல்களை வழங்கிய பாடசாலை அதிபர் அஷ் ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம் மற்றும் ஆலோசனை வழங்கிய இணைப்பாடவிதானத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபர் ஜே.வஹாப்தீன், உடற்கல்வி பாட சிரேஷ்ட ஆசிரியர் பாடசாலை பொலிஸ் கெடற் பிரிவின் பொறுப்பாசிரியர்
பிளட்டூன் கொமாண்டர் (PLATOON COMMANDER) லெப்டினன்ட் ஏ.எம்.எம். கியாஸ், மேலும் இம்மாணவனுக்கு தொடர் பயிற்சியினை வழங்கிய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொலிஸ் கெடற் பயிற்றுவிப்பாளர் எம்.சுதர்சன் (PC-84941), பாடசாலையின் கெடற் பிரிவுக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை வழங்கும் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.நௌஸாத், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.அஸ்மத் ஸஹி ஆகியோருக்கு பாடசாலை சமூகம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளது.
Post a Comment
Post a Comment