மட்டக்களப்பில் இ.போ.ச. பஸ் சாரதி, மீது தாக்குதல் - தனியார் போக்குவரத்து சாரதி தப்பி ஓட்டம்





மட்டக்களப்பில் இ.போ.ச. பஸ் சாரதி, மீது தாக்குதல் - தனியார் போக்குவரத்து சாரதி தப்பி ஓட்டம் இருவர் வைத்தியசாலையில் அனுமதி..!
மட்டக்களப்பு நகர் தனியார் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று புதன்கிழமை (15) இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி சாரதி நடத்துனர் மீது தனியார் போக்குவரத்து சாரதி மேற்கொண்ட தாக்குதல் சாரதி நடத்துனர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட சாரதி பஸ் வண்டியுடன் தப்பி ஓட்டம் நடுத்துனரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பஸ்தரிப்பு நிலையத்தில் சம்பவதினமான பகல் 11.10 மணியளவில் பிரயாணிகளை ஏற்றுவதற்காக தனியார் பஸ்வண்டி தரித்து நின்றுள்ளது. இதன் போது பின்னால் கல்முனையை நோக்கி பிரயாணித்த மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சாலைக்கான பஸ்வண்டி சாரதி பஸ்தரிப்பு நிலையத்தில் நிறுத்துவதற்காக அங்கு தரித்து நின்ற தனியார் பஸ்வண்டி சாரதியை பஸ்வண்டியை கொஞ்சம் முன்னோக்கி நகர்த்துமாறு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனியார் பஸ்வண்டி சாரதி கோபமடைந்து பஸ்வண்டியில் இருந்து இறங்கி இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி சாரதி, நடத்துனர் மீதும் தாக்குதலை மேற்கொண்டதில் சாரதி,நடத்துனர் படுகாயமடைந்ததையடுத்து அங்கிருந்து தனியார் பஸ்வண்டி சாரதி பஸ்வண்டியுடன் தப்பி ஓடியதையடுத்து இதில் காயமடைநத இருவரையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் தனியார் பஸ்வண்டி நடத்துனரை கைது செய்துள்ளதாகவும் தப்பி ஓடிய சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.