(வி.ரி.சகாதேவராஜா)
பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் டென்னிஸ் சங்கத்தினால் பொது மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டரங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் தமெந்த விஜயசிறி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாணவர்கள் டென்னிஸ் விளையாட்டில் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment