(வி.ரி.சகாதேவராஜா)
மறைந்த முன்னாள் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானாவிற்கான துஆப் பிரார்த்தனை மற்றும் இரங்கல் நிகழ்வு சம்மாந்துறை வலய சபூர் வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் எம்பீஎம். ஸாபீர் தலைமையில் நேற்று(28) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்எச்எம். ஜாபீர் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றினார்.
மாணவர்கள் குர்ஆன் ஓதினர்.
கௌரவ அதிதியாக உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
மேலும் விசேட அதிதிகளாக பலர்
கலந்து சிறப்பித்தார்கள்.
ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் விரும்பிகள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
Post a Comment
Post a Comment