அக்கரைப்பற்றில், இராணுவ படைப்பிரிவு- 241 இன் ஏற்பாட்டில், வெசக் தோரணங்கள் திறந்து வைப்பு




 



அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் அமைந்துள்ள சிறி விஜயராம விகாரையில், வெசக் தினத்தினை முன்னிட்டு, தோரணங்கள் திறந்து வைக்கப்பட்டன.  குறித்த இந்த நிகழ்வு சனிக்கிழமை இரவு 7.30 அளவில்  இடம்பெற்றது. 

இந் நிகழ்வுகள்,அக்கரைப்பற்று விஜயராம விகாரையின் அதிபதி சங்கைக்குரிய தேவகொட சோரத்ன தேரர் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாஹ், அக்கரைப்பற்று இராணுவ - 241 படைப்பிரிவின் பொறுப்பதிகாரி, பிரிகேடியர் டனிக பத்திரண,மற்றும் சிவில் விவகார அதிகாரி மேஜர் சுபசிங்க, சட்டத்தரணி இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.