புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU)




 


நூருல் ஹுதா உமர் 


இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் மைக்ரோ டெவலப்மென்ட் இன்க். (PIMD) பங்குதாரர்களை ஒன்றிணைத்து, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி, உபவேந்தர் அலுவலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. 

இலங்கையில் உள்ள ஆங்கில ஆசிரியர்களுக்கு ஒலியியல் விழிப்புணர்வு மற்றும் ஒலிப்பு கற்பிப்பதற்கான குறுகிய பாடநெறியை தொடர்வதற்கான முன்னேற்பாடாகவே குறித்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

நிகழ்வின்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் , பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் ஆகியோருடன் ஆங்கில மொழித்துறை (DELT) தலைவர் கலாநிதி எம்.ஐ.எப் கரீமா பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ், மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம். அப்துல் ரஹ்மான் மற்றும் விரிவுரையாளர் இசட். ஹூருல் பிர்தௌஸ், ஏ.ஆர்.எப். றிஸ்னி சனோ உள்ளிட்ட குழுவினர் நேரடியாகவும் விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம் மற்றும் ஆஸ்திரேலியாவின் மைக்ரோ டெவலப்மென்ட் இன்க். (PIMD) இன் பிரதிநிதிகள் Zoom தொழில்நுட்பத்திநூடாகவும் பங்கேற்றனர்.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) PIMD ஆல் டிஜிட்டல் கையொப்பம் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த உபவேந்தர், பாடநெறியில் காணப்படும் பல முக்கிய விஷயங்களை குறிப்பிட்டுக் கூறியதுடன் சமூகத்தில் உள்ள ஆங்கில ஆசிரியர்களிடையே நன்மை பயக்கும் வெளியீட்டைக் கொண்டு வருவது தற்போதைக்கு அவசியமானது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

துறைத் தலைவரும் பாடநெறியின் ஒருங்கிணைப்பாளருமான கலாநிதி எம்.ஐ.எப் கரீமா, பாடத்திட்டத்தைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் மற்றும் அதன் எதிர்கால முன்னேற்றம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.