வளைகுடா நாடுகளில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது - சில பகுதிகளில் ஓராண்டுக்கான மழை ஒரே நாளில் பெய்துள்ளது. உலகின் பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச நிலையத்திலும் வெள்ளம் சூழந்தது. இதனால் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே, நகரின் நிதி மையம் மற்றும் வணிக வளாகங்களைச் சுற்றியுள்ள சாலைகள் நீரில் மூழ்கின. இந்த குடியிருப்புப் பகுதியில் உள்ள சாலையில் செல்வது கடினமானது. ஆனால், இவர்கள் இதை ஒரு சவாலாக பார்க்கின்றனர்.
துபாயின் சில பகுதிகளில் ஓராண்டுக்கும் அதிகமான மழை ஒரே நாளில் பெய்துள்ளது. வளைகுடா நாடுகள் பொதுவாக வெப்பமான, வறண்ட வானிலைக்கு பெயர் பெற்றவை, ஆனால் அங்கு அடிக்கடி அதீத மழைப் பொழிவும் ஏற்படுகிறது.
ஓமனில் வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானம் மூலம் போலீசார் மீட்டனர். நாடு முழுவதும் பதினெட்டு பேர் இறந்தனர் - அவர்களில் பள்ளி மாணவர்களும் பேருந்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
மின்னல், வெள்ளத்தால் பஹ்ரைனும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும், பள்ளிகள் மூடப்பட்டன, மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று புதன்கிழமை சில இடங்களில் தீவிர புயல் மழை இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment