வி.சுகிர்தகுமார் 0777113659
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிவரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
இதன் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் ரீதியாக 'சமுர்த்தி அபிமானி' புத்தாண்டு சந்தையினை நடாத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில்; சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தையினை இன்றும் நாளையும் (9,10) ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ந.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன்; மற்றும் அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.ஏ.சி.அஹமட் ஷாபி;ர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹூசைன்டீன் நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா நிருவாக கிராம அலுவலர் பரிமளவாணி சில்வெஸ்டார் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் கருத்திட்ட முகாமையாளர் ரி.கமலபிரபா சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான கவிதா கிருதாசன் எஸ்.சுரேஸ்காந் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி பிரிவினரால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்ட அதிதிகள் வியாபார நிலையங்களை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.
பின்னர் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டதுடன் கொள்வனவிலும் ஈடுபட்டனர்.
இதேநேரம் பல்வேறு உற்பத்தி பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

Post a Comment
Post a Comment