அட்டாளைச்சேனை 04 ஆம் பிரிவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மூத்த ஆலிம் மௌலவி ஏ. ஸீ.முகம்மது (பாகவி) இன்று கிண்ணியாவில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா கிண்ணியா துறையடி வீதியிலுள்ள அவரது மகன் முகம்மது இர்பான் அவர்களது இல்லத்திலிருந்து அசர் தொழுகையுடன் ரஹ்மாணியா ஜும்மா பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்படு ரஹ்மானியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாருக்காக துஆ செய்துகொள்ளுங்கள்! அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிராத்திப்போம் இரக்கமுள்ள ரஹ்மானே! இவர் முற்படுத்திவைத்த எல்லா நல்லமல்களையும் அங்கீகரித்து, அருள் புரிந்தும் விடுவாயாக اَللّهُمَّ اغْفِرْ لَه وَارْحَمْه وَعَافِهِ وَاعْفُ عَنْه وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبر இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!! (ஹதீஸ் : முஸ்லிம்)
Post a Comment
Post a Comment