( வி.ரி.சகாதேவராஜா)
தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் பிரதீபன் கேசித் தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.
பாணாடிருப்பை சேர்ந்த பிரதீபன் பிருந்தா தம்பதியினரின் மூத்த புதல்வனான கேசித் கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் 170 புள்ளிகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய ஒலிம்பியாட் கணித விஞ்ஞான போட்டியில் தேசிய மட்டத்திற்கு பங்குபற்றிய மாணவர்களையும் மற்றும் தேசிய ஒலிம்பியாட் குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் மாணவன் பிரதீபன் கேசித்தையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (29) திங்கட்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ச.இ.றெஜினோல்ட் தலைமையில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதீபன் கேசித் விசேடமாக பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
Post a Comment
Post a Comment