வி.சுகிர்தகுமார் 0777113659
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அனுசரணையில் தேசிய ரீதியில் ஸ்மார்ட் யுத் இளைஞர் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா தேசிய ரீதியில் நேற்று (27)பிற்பகல் வேளையில் இடம்பெற்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று தம்மரெத்தின சிங்கள மகாவித்தியாலய மைதானத்தில் நேற்று பிற்பகல் வேளையில் ஸ்மார்ட் யுத் இளைஞர் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் த.கஜேந்திரனின் ஆலோசனைக்கு அமைய இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் இளைஞர் சேவை மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எச்.யு.சுசந்த பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் மாவட்ட உதவிப்பணிப்பாளர் யு.எல்.மஜீட் மற்றும் இளைஞர் சேவை மன்றத்தின் பொறுப்பதிகாரி ஏ.ஹமீர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராம நிருவாக அலுவலர் பரிமளவாணி சில்வெஸ்டர் இளைஞர் சேவை மன்ற உறுப்பினர்கள் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினர் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதி போட்டி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
வழக்கு மரம் ஏறுதல் தலையனைச்சமர் முட்டி உடைத்தில் கிடுகிழைத்தல் சாக்கோட்டம் சமநிலை ஓட்டம் தேங்காய் துருவுதல் முட்டை மாற்றுதல் தொப்பி மாற்றுதல் வினோத உடைப்போட்டி என பல்வேறு பாரம்பரிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Post a Comment
Post a Comment