நியமன கடிதம் வழங்கி வைப்பு !
நூருல் ஹுதா உமர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபையால் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் உத்தியோகபூர்வமாக இன்று (04) காரைதீவு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச செயலகத்திற்கான முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். பர்ஹானின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன், நிர்வாக உத்தியோகத்தர் ரீ. கமலநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்துக்கான நியமன கடிதங்களை ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ. பௌசர், உப தலைவர் ஏ.எம். ஜாஹீர், உப செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பொருளாளர் எம்.எப்.எம். றிபாஸ், உறுப்பினர் எஸ். பஸ்லூன் ஆகியோரிடம் கையளித்தனர்.
மாளிகைக்காட்டின் மூத்த பள்ளிவாசலான இந்த ஜும்மா பெரிய பள்ளிவாசல் தமிழ்- முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் காரைதீவு பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள பள்ளிவாசலாகும்.
Post a Comment
Post a Comment