நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். லத்தீப் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். றிஸ்வானுல் ஜன்னா தலைமையில் நிந்தவூர் 02 அல்ஹிதாயா மகளிர் சங்க தலைவி எம்.ரி. நவுஷாவின் முயற்சியின் விளைவாக நிந்தவூரைச் சேர்ந்த தன்னார்வ தனவந்தர் ஒருவரின் பங்களிப்புடன் அல்ஹிதாயா மகளிர் சங்க அங்கத்தவர்கள் அனைவருக்கும் ஈச்சம் பழங்கள் இன்று (02.04.2024) வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு நிந்தவூர் பிரதேச பெண்கள் சிறுவர் பிரிவின் உத்தியோகத்தர்களான உளவளத் துணை உதவியாளர்கள் டி.எம். ஹஃப்ரத் மற்றும் ஏ.ஆர். தஹ்லான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment