சித்திரை புத்தாண்டு கலாசார விளையாட்டு விழா




 


(வி.ரி.சகாதேவராஜா)


குரோதி சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 41வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமூக நிலையமும்  இணைந்து நடாத்திய 26வது மாபெரும் கலாசார விளையாட்டு விழாவின் காலை நிகழ்ச்சிகள்  கழகத் தலைவர் வி.விஜயசாந்தன் தலைமையில் இன்று (20) சனிக்கிழமை காலை மரதன் ஓட்டத்துடன் சிறப்பாக  ஆரம்பமாகியது.

காலை நிகழ்வான மரதன் ஓட்டமானது கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு காரைதீவு விளையாட்டு கழக காரியாலயத்தில் நிறைவுபெற்றது.

கழக போசகர்களான சிவ.ஜெகராஜன், வே.இராஜேந்திரன், வே.த.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

நான்கு கிலோமீட்டர் நீள மரதன் ஓட்டத்தில் ஏழு போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

 காரைதீவு பொலிசார் மற்றும் காரைதீவு பிரதேச வைத்தியசாலை உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரவளித்தன.