அக்கரைப்பற்று பட்டின ஜூம்ஆ பள்ளிவாயலில் இன்றைய தினம் நோன்புப் பெருநாள் தொழுகை இடம்பெற்றது. தொழுகையினை, மௌலவி ஹாதி அவர்கள் நடத்தி வைக்க, குத்பாவினை மௌலவி கலாமுல்லாஹ் நடத்தி வைத்தார்.
அக்கரைப்பற்று பட்டின ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகம், ரமழானின் கடந்த 29 நாட்களில் சிறந்த முறையில் ஏற்பாடுகளைச் செய்தது போல, நோன்புப் பெருநாள் தினத்திலும் விசேட ஏற்பாடுகனைச் செய்தது. ஆண்களும் பெண்களுமாக, சுமார் 3000 பேர் வரை இன்றைய தினத்தில் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment