"அறிவுச் சுரங்கம்" போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய ரீதியில் முதலிடம்"
ANCHOR - COLOMBO COMMODITIES இன் பூரண அனுசரனையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் புனித ரமழானை முன்னிட்டு வருடா வருடம் நடாத்தும் அறிவுச் சுரங்கம் போட்டிகளின் தேசிய மட்ட அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இன்று (04) வியாழக்கிழமை கொழும்பு அல்-ஹிதாயா கல்லூரியில் ஆரம்பமானது.
அரையிறுதியில் திருகோணமலை வெள்ளை மணல் முஸ்லிம் மகா வித்தியாலயம் "B பை" சந்தர்ப்பத்தைப் பெற முதலாவது போட்டியில் ஹெம்மாத்துகம முஸ்லிம் கல்லூரியை எதிர்த்து காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் போட்டியிட்டனர். இதில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் 92 புள்ளிகளையும் ஹெம்மாத்துகம முஸ்லிம் கல்லூரி மாணவர்கள் 64 புள்ளிகளையும் பெற்றனர். இதன்படி அரையிறுதியில் மேலதிக 28 புள்ளிகளால் வெற்றி பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறுதிப் போட்டியில் திருகோணமலை வெள்ளை மணல் முஸ்லிம் மகா வித்தியாலயத்தை எதிர்த்துப் போட்டியிட்ட காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் 69 புள்ளிகளைப் பெற வெள்ளை மணல் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் 30 புள்ளிகளைப் பெற்றனர். இதன்படி மேலதிக 39 புள்ளிகளினால் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று முதலிடத்தை தட்டி வரலாற்று சாதனையை நிலைநாட்டினர்.
இச்சாதனையை நிலைநாட்டிய
FRM. Munshif தலைமையிலான
MRM. Usama Nusaith, MNM.Shafir ஆகிய மாணவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதிப் போட்டியில் முதலிடத்தைப் பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூபாய். 50,000 பணப் பரிசும் வெற்றிக் கிண்ணமும் அனுசரனை வழங்கிய ANCHOR - COLOMBO COMMODITIES நிறுவனத்தினரால் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஆரம்பம் முதல் இவர்களை ஊக்கமளித்து வழிகாட்டிய பாடசாலை அதிபர் அல்ஹாஜ் MA. நிஹால் அஹமட் B.sc அவர்களுக்கும் இணைப்பாட விதானத்துக்குப் பொறுப்பான பிரதி அதிபர் ஜனாப். MNM. பெளஸான் அவர்களுக்கும் ஏனைய பிரதி அதிபர்களுக்கும் பயிற்றுவித்த உயர்தர விஞ்ஞான பிரிவு பகுதி தலைவர் ஜனாப். J. இஸ்ஸடீன் உட்பட ஏனைய ஆசிரியர்களுக்கும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இம்மாணவர்களை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் ஜனாப். KM. அன்ஸார் அவர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Post a Comment
Post a Comment