அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் காற்றுடன் கூடிய மழை





 வி.சுகிர்தகுமார் 0777113659 

 அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக தாழ் நில பிரதேசங்களும் சில வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்த  மழை இன்று காலையிலும் தொடரும் நிலையில் மீண்டும் மழை பெய்யவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுகின்றது.
அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்தவில், கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு மழை பெய்து வருகின்றது.
அம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையினால் மாவட்டத்தின் பல்வேறு தாழ் நிலபிரதேசங்களும் வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதுடன்  காற்றும் வீசி வருகின்றது.
இதனால் மக்களது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்திலும் பல தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் விளையாட்டு மைதானங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.