ஈரானின் தாக்குதலில், இஸ்ரேலைப் பாதுகாத்தது, ஜோர்தான்




 கடந்த ஏப்ரல் 14-15ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவு மத்திய கிழக்கில் வசிப்பவர்களுக்கு ஒரு நீண்ட இரவாக அமைந்தது.


அன்றிரவு இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இரான் தாக்குதல் நடத்தியது. இது உலகின் கவனத்தையே அரபு நாடுகளின் வானத்தை நோக்கித் திருப்பியது.


சமீபத்தில் சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரான் துணைத் தூதரகம் தாக்கப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. ஆனால் அதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் பொதுவான கருத்து நிலவுகிறது.


இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் போர் காரணமாக ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையும் அரபு பிராந்தியத்தின் மீதுதான் உள்ளது. எனவே, இரானின் இந்தத் தாக்குதலை உலகம் முழுவதும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தது.


இந்தத் தாக்குதல்கள் அன்றிரவின் வெவ்வேறு நேரங்களில் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் தன்னைத் தனது நட்பு நாடுகளின் உதவியுடன் தற்காத்துக் கொண்டது.


இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் அதன் நவீன பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், சில இஸ்ரேலின் எல்லையை அடைவதற்கு முன்பே அமெரிக்கா உள்ளிட்ட பிற நட்பு நாடுகளின் உதவியுடன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


இரானின் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை தற்காத்துக்கொள்ள உதவிய நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகியவை அடங்கும்.


அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்றுமே மேற்கத்திய நாடுகள். ஆனால் இரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடான ஜோர்டானும் சுட்டு வீழ்த்திய சம்பவம், பாகிஸ்தான் உள்ளிட்ட உலகின் பல்வேறு இஸ்லாமிய நாடுகளிலும், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிலர் ஜோர்டானை விமர்சிக்கவும் செய்தனர்.


இரான் - இஸ்ரேல்: எந்த நாட்டின் ராணுவம் வலிமையானது? இரான் தாக்குதலின் பின்னணி என்ன? முழு விவரம்


பாகிஸ்தானில் சூடுபிடித்த விவாதம்

இஸ்ரேல், இரான், ஜோர்டான் பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தானில், 'ஜோர்டான்' என்ற வார்த்தை ‘எக்ஸ்’ சமூக ஊடக தளத்தில் ட்ரெண்ட் ஆனது.


இதுகுறித்து, பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினரும், ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருமான முஷ்டாக் அகமது கான், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் படத்தைப் பகிர்ந்து எதிர்மறையான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.


முஷ்டாக்கின் இந்தப் பதிவுக்கு 26 லட்சத்திற்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்தனர்.


'ஆசாத் டிஜிட்டல்' சமூக வலைதளத்தில் அவர், "இஸ்ரேலின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தடுக்க ஜோர்டான் மன்னருக்கு ஒருபோதும் மனம் வரவில்லை. ஆனால் இரான் இஸ்ரேலை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்கியபோது, அவர் உடனே இஸ்ரேலின் உதவிக்கு வந்தார். எனக்கு இது மிகவும் மோசமான நடவடிக்கையாகப் பட்டது,” என்றார்.


இந்த நடவடிக்கை பாகிஸ்தான் மட்டுமின்றி ஜோர்டானிலும் விமர்சிக்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை, அந்நாட்டின் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.


ஜோர்டானில் உள்ள ஐந்தில் ஒருவரின் மூதாதையர்கள் பாலத்தீனப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் மனைவி ராணி ரானியாவும் பாலத்தீனத்தைச் சேர்ந்தவர். காஸாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து சமீபகாலமாக அவர் குரல் எழுப்பி வருகிறார்.


தூஸ்ஸாங் ல்யூவெர்த்யூர்: பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்து புரட்சி செய்த 'கருப்பு நெப்போலியன்'

14 ஏப்ரல் 2024

சிங்கப்பூரை விட பெரிய ராட்சத பனிப்பாறையின் நகர்வை 'அழிவின் பாதை' என்று விஞ்ஞானிகள் கூறுவது ஏன்?


படக்குறிப்பு,ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா

ஜோர்டான், இரான் நிலைப்பாடுகள் என்ன?

இந்த விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, ஜோர்டான் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஜோர்டான் மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக’ கூறப்பட்டிருக்கிறது.


அந்த அறிக்கையின்படி, “சில ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஜோர்டானின் வான்வெளிக்குள் வந்தன. அவை எங்கள் மக்களுக்கும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்ததால் அவற்றைத் தடுத்து நிறுத்தினோம். அவற்றின் சிதிலமடைந்த பாகங்கள் ஜோர்டானின் பல இடங்களில் விழுந்தன, ஆனால் அவை யாரையும் காயப்படுத்தவில்லை.”


மேலும், “ஜோர்டானையும், அதன் குடிமக்களையும், அதன் வான்வெளியையும் பாதுகாக்க எதிர்காலத்தில் எந்தவொரு நாடு நடத்தும் தாக்குதலையும் ஜோர்டான் தடுக்கும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனத்தின் அறிக்கைப்படி, இஸ்ரேலுக்கு எதிரான தங்கள் தாக்குதலின் போது ஜோர்டான் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தாங்கள் கண்காணித்து வருவதாக தாக்குதலை நடத்திய இரானின் புரட்சிகர காவலர்கள் கூறியுள்ளனர்.


ஜோர்டான் தொடர்ந்து தலையிட்டால், அந்நாடு இரானின் அடுத்த இலக்காக இருக்கலாம். ஆனால் இரானின் உள்துறை அமைச்சர் நாசர் கனானி ஒரு செய்தியாளர் சந்திப்பில், "இந்தத் தாக்குதலை இடைநிறுத்தியதில் ஜோர்டானின் பங்கு பற்றி நான் பேச முடியாது, அது ராணுவ விவகாரம்," என்று கூறினார்.


“ஜோர்டானுடனான எங்கள் உறவுகள் நட்பு ரீதியானவை. கடந்த சில மாதங்களாக இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே அடிக்கடி சந்திப்புகள் நடந்தன,” என்றார்.


சமீபத்தில் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளமான 'டவர் 22' மீது இராக் போராளிக் குழுவான ‘அல்-மக்மூதா இஸ்லாமியா’வால் ட்ரோன்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர்.


ஜோர்டான் வரலாற்று ரீதியாக அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது. 1990களில் இரு நாடுகளுக்கும் இடையே அமெரிக்கா முன்னெடுத்த ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டபோது இஸ்ரேலுடனான அதன் உறவுகள் மேம்பட்டன.


பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்


ஜோர்டானின் வரலாறு

இஸ்ரேல், இரான், ஜோர்டான் பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜோர்டானின் அம்மான் பகுதியில் விழுந்த இரானிய ஏவுகணையின் சிதைவுகள்

புவியியல் ரீதியாக, ஜோர்டான் மத்திய கிழக்கில் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது. சௌதி அரேபியா, இராக் மற்றும் சிரியாவை தவிர, ஜோர்டான், இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது ஜோர்டான். பாலத்தீனப் பகுதிகள் மற்றும் சிரியாவை சேர்ந்த ஏராளமானோர் ஜோர்டானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


ஜோர்டானில் முடியாட்சி உள்ளது. தற்போது இரண்டாம் அப்துல்லா ஜோர்டான் மன்னராக உள்ளார். 1946இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த ஹாஷிமைட் வம்சம் (அல் ஹாஷிமூன்) ஜோர்டானை ஆட்சி செய்து வருகிறது.


மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹாஷ்மி குடும்பத்தின் வரலாறு மற்றும் வம்சாவளி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜோர்டான் மன்னரின் பரம்பரை இஸ்லாத்தைத் தோற்றுவித்த முகமது நபியின் வழித்தோன்றலாக வந்தது.


இருபதாம் நூற்றாண்டிற்கு முன்பு, இந்தப் பகுதி 400 ஆண்டுகளாக உஸ்மானியா சுல்தான்களால் (உஸ்மானிய பேரரசு) ஆளப்பட்டது. ஆனால் அதன் பின்னர் முதல் உலகப் போரின் போது நட்பு நாடுகளுக்கு எதிராகப் போராட முடிவு செய்தது. இந்த முடிவின் மூலம், மெக்காவின் அப்போதைய அமீர் (உள்ளூர் ஆட்சியாளர்) ஷெரீப் ஹுசைன் பின் அலி, ஒட்டோமான் சுல்தானகத்திடம் இருந்து சுதந்திரம் பெறும் வாய்ப்பைப் பெற்றார்.


பிரிட்டன் உட்பட மற்ற கூட்டணி சக்திகளின் உதவியுடன், 1916இல் அரபு கிளர்ச்சிக்குப் பிறகு மெக்கா ஒட்டோமான் சுல்தானகத்தில் இருந்து சுதந்திரம் பெற்றது.


கடந்த 1917இல், ஆங்கிலோ-அரபு ராணுவம் பாலத்தீனத்தை உள்ளடக்கிய பகுதியைக் கைப்பற்றியது. 1921ஆம் ஆண்டில், பாலத்தீனம் அந்தப் பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு 'டிரான்ஸ் ஜோர்டான்' பகுதிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஆட்சி அப்துல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ஜோர்டானின் முதல் மன்னரானார்.


மெக்காவின் எமிர் ஷெரீப் ஹுசைன் பின் அலியை சர்ச்சைக்குரிய பால்ஃபோர் பிரகடனத்தில் கையொப்பமிட வைக்க பிரிட்டன் பலமுறை முயன்றது. அதற்குப் பதிலாகப் பெரிய தொகையைக் கொடுக்கவும் முயன்றது. ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதன் பின்னர் கூட்டணி நாடுகள் சார்பில் சௌதி குடும்பத்தினருடன் ஒப்பந்தம் ஏற்பட்டது.


பிராமண எதிர்ப்பு இயக்கம், பாலியல் கல்வி வழக்குகளில் அம்பேத்கர் முன்வைத்த வாதங்கள் என்ன தெரியுமா?


இஸ்ரேல்-ஜோர்டான் உறவுகள்இஸ்ரேல், இரான், ஜோர்டான் பட மூலாதாரம்,

படக்குறிப்பு,ஜோர்டான் கொடி

பால்ஃபோர் பிரகடனம், யூதர்களுக்காகத் தனி நாட்டை நிறுவ பிரிட்டன் கொண்டு வந்த ஒரு சர்ச்சைக்குரிய திட்டம். 1946 வரை, அந்தப் பகுதி பிரிட்டனின் மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து ஆளப்பட்டது. ஆனால் 1946இல் அது ஜோர்டானின் ஹாஷிமைட் அரசு என்ற பெயரில் ஒரு சுதந்திர நாடாக மாறியது.


கடந்த 1948 மற்றும் 1973க்கு இடையில், ஜோர்டான் இஸ்ரேலுடன் நான்கு போர்களை நடத்தியது. 1948இல் நடந்த முதல் அரபு-இஸ்ரேல் போர், 1967இல் நடந்த போர், 1967 முதல் 1970 வரை நடந்த போர், 1973இல் நடந்த போர் ஆகியவை இதில் அடங்கும்.


அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஆட்சிக் காலத்தில் ஜோர்டானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 1994ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கவில்லை.


ஜோர்டானின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின்படி, ஜோர்டானின் கொடியின் கதையும் மிகவும் சுவாரஸ்யமானது. இந்தக் கொடி ஒட்டோமான் சுல்தானகத்திற்கு எதிரான அரபு கிளர்ச்சியின் கொடியால் உந்தப்பட்டது.


இது மூன்று வெவ்வேறு வண்ணப் பட்டைகள் மற்றும் ஒரு சிவப்பு முக்கோணத்தைக் கொண்டுள்ளது. இந்தக் கொடியில் ஏழு புள்ளிகள் கொண்ட நட்சத்திரமும் உள்ளது.


இந்த நட்சத்திரத்தின் ஒவ்வொரு விளிம்பும் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் முதல் சூராவான 'அல்-ஃபாத்திஹா'வின் ஏழு வசனங்களைக் குறிக்கிறது. இந்தக் கொடியை பாலத்தீனக் கொடியில் இருந்து வேறுபடுத்துவது இந்த நட்சத்திரம்தா