அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில், இணைப்பாட விதானகுழுக்கள் உருவாக்கம்




 




அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் இணைப்பாட விதான அபிவிருத்திச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய 42 வகையான குழுக்கள் உருவாக்கம்

....................................


எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு கழகங்கள்/சங்கங்கள்/படையணிகள் என 42 வகையான குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டதுடன்‌ அவர்களுக்கான கடமைப் பொறுப்புக்களும் இன்று 24/04/2024 கையளிக்கப்பட்டது.


இக்கடமைப் பொறுப்புக்கள் யாவும் அதிபர் AH.பௌஸ் (SLEAS) அவர்களின் பணிப்புரைக்கமைவாக‌ இணைப்பாடவிதான விதான அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான‌ பிரதி அதிபர் லெப்டினன் NM.முஹமட் ஸாலிஹ் (SLPS) அவர்களினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதற்கிணங்க இக்குழுக்கள் யாவும் குறித்த பொறுப்பாசிரியர்களுடன் எமது மாணவச் செல்வங்களின் பல்வேறு நலன்சார் விடயங்களுக்காக (மாணவ உறுப்பினர்களுடன்) தொடர்ச்சியாக பயணிக்கவுள்ளது.