கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலின் தஃவா குழு ஏற்பாடு செய்திருந்த 10 நாட்கள் கொண்ட ரமழான் செயலமர்வு தொடராக இண்டாவது வருடமாகவும் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இதன் இறுதி நாள் பரிசளிப்பு நிகழ்வு 05.04.2024 ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து பள்ளி வாசல் நிர்வாக சபைத் தலைவர் அல்-ஹாஜ் இப்றாகீம் தலைமையில் பேஷ் இமாம் மெளலவி ஏ.எம்.சாபித் (ஸரயி, றியாதி) அவர்களின் வழி நடாத்தலில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மெளலவி எஸ்.எம்.றிஷாத் ஸலீம்
(றியாதி) Phd கலந்து கொண்டு சிறப்பித்தார்.
70 மாணவர்கள் கலந்துகொண்டு அகீதா, பிக்ஃஹ், ஸீரா, அஹ்லாக், தஜ்வீத், பிக்ஃஹுஸ் ஸலா போன்ற பாடங்களை கற்று இறுதி பரீட்சையில் வெற்றியாளர்களாக தெரிவானோருக்கு, முதலாம் பரிசாக 10000 ரூபாவும் இரண்டாம் பரிசாக 7000 ரூபாவும் மூன்றாம் பரிசாக 5000 ரூபாவும் ஆறுதல் பரிசில்கள் 2000 ரூபாய்கள் வீதம் 12 மாணவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
பங்கு கொண்ட 70 மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கிவைக் கப்பட்டதுடன்,
கற்பித்த கண்ணியமான உலமாக்களும் அன்பளிப்புகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
Post a Comment
Post a Comment