நூருல் ஹுதா உமர்
1971 யில் மஹ்மூத் மகளிர் கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை (2024) 53 வருட கால கல்வி செயற்பாட்டில் இலங்கை திருநாட்டின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் நிருவாகத்தின் கீழ் இயங்கும் மஹ்மூத் மகளிர் கல்லூரியானது முஸ்லிம் பெண்கள் கல்வி வளர்ச்சியில் தனக்கு என்று தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளது.
இதன் பின்னணியில் இக்கல்லூரியின் நீண்ட கால தேவையாகவும் வரலாற்று நிகழ்வுகளை தற்கால இளம் மாணவ சமூகத்தவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் கல்லூரி முதல்வரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்திட்டங்களில் ஒன்றான இக்கல்லூரியில் அதிபர்களாக கடமையாற்றியவர்களின் பெயர்கள் மற்றும் காலங்களை உள்ளடக்கிய "மஹ்மூத் அதிபர் பெயர் பலகை" உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (17) கல்லூரியின் நிர்வாக கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் குறித்த பெயர் பலகையினை இக்கல்லூரியின் பழைய மாணவியும் தற்போதைய 17வது அதிபரும் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முதலாவது இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரியுமான அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இக்கல்லூரி வரலாற்றில் (1971-2024) இன்றுவரை 17 அதிபர்கள் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment