நூருல் ஹுதா உமர்
உணவு பாதுகாப்பு தொடர்பான வருடாந்த மாவட்ட மீளாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (18) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்சார் மற்றும் உணவுப் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் அவர்களினால் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாடு நிருவாகப் பிரிவுக்கான சமுதாய மருத்துவ நிபுணர் டொக்டர் பானுஜ, உணவுக் கட்டுப்பாடு நிருவாகப் பிரிவுக்கான சிரேஷ்ட உணவு மற்றும் மருந்து பரிசோதகர் ஜவாத் மரைக்கார் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கல்முனை பிராந்தியத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் உணவு பாதுகாப்பு மற்றும் உணவகங்கள் பதிவு செய்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதார வைத்திய அதிகாரிகளினால் காத்திரமான விளக்கக்காட்சியுடன் கூடிய பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment