உணவு விநியோக செயற்றிட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றம்




 


( எம்.என்.எம்.அப்ராஸ்)

புனித நோன்பு நாட்களில் கல்முனை பிராந்தியத்திலுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும் மற்றும் தூர பிரதேசங்களிலிருந்து கல்முனைக்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்தவர்களுக்குமான இலவச ஸஹர் உணவு விநியோகிக்கும் செயற்றிட்டத்தினை இவ்வருடமும் (2024)கல்முனையன்ஸ் போரம் மிக வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது. 

தூர இடங்களிலிருந்து கல்முனை பிராந்தியத்திற்கு பல்வேறுபட்ட தேவைகளுக்காக வருகை தருபவர்கள் புனித நோன்பினை நோற்பதற்கான ஸஹர் உணவை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவது பற்றி கல்முனையன்ஸ் போரத்தின் கவனத்திற்கு எட்டப்பட்டதினால் இச்செயற்றிட்டம் கடந்த ஆறு வருடங்களாக தொடர்ந்து தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இத்திட்டத்தின் மூலம் நோன்பு ரமழான் முழுவதும் மொத்தமாக 4164 நோன்பு பிடிக்கும் ஸஹர் உணவு ஏற்பாடுகளை கல்முனை,மருதமுனை,

சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களுக்கு எவ்வித தடைகளுமின்றி உரிய ஸஹர் நேரத்திற்கு நோன்பாளிகளின் இடத்துக்கே சென்று 

மேற்படி ஸஹர் உணவானது ரமழான் காலத்தில் மாலை 5:00 மணியிலிருந்து இரவு 7:00 வரைக்கும் தொலைபேசியூடாக கிடைக்கப்பெறும் முன்பதிவுகள் அடிப்படையில் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது