( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு பாலையடிவட்டை விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள வம்மியடியூற்று கிராமத்தில் நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாலையடிவட்டை விவசாய போதனாசிரியர் ரீ.கோபி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் கலந்து கொள்ள பாடவிதான உத்தியோகத்தர்களான லக்ஸ்மன் மற்றும் மாறன் கிராம சேவை உத்தியோகத்தர் தெற்கு வலய விவசாய போதனாசிரியர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புகள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாமரங்கள் மற்றும் பழமரங்களின் கத்தரித்தல் பழக்கப்படுத்தல் பசளைப்பிரயோகம் விவசாய இரசாயனங்களின் முறையான பயன்பாடு கொடித்தோடை நடுகை மற்றும் பராமரிப்பு என்பன பற்றிய செய்துகாட்டல்கள் விவசாய போதனாசிரியர்களால் தெளிவூட்டப்பட்டதுடன் விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கௌபி அறுவடையும் இடம்பெற்றது.
விவசாயிகளுடனான கலந்துரையாடலில் விவசாயிகளின் பிரச்சினைகள் கேட்டறியப்பட்டு அதற்கான தீர்வுகளை வழங்குவதாக பிரதி விவசாய பணிப்பாளர் உறுதியளித்தார்.
Post a Comment
Post a Comment