சுகாதாரமற்ற நகரமாக மாறி வருகின்றது, நுவரெலிய




 


இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் நுவரெலியா முக்கிய சுற்றுலா நகரமாக விளங்குகிறது. இதில் ஏப்ரல் மாதத்தில் ஆண்டுதோறும்

ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர் . சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரில் சுகாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.


குறிப்பாக நகரில் போதிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாத நிலையில் குப்பைகளை கண்ட இடங்களில் வீசிச் செல்வதால் நகரம் அசுத்தப்பட்டு சுகாதார சீர்கேடான நிலையில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இவ்விடயத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் நுவரெலியா மாநகரசபை சற்று பின்தங்கியுள்ளது.


நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் சென்று உணவு சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். பெரும்பாலானவர்கள் வாகனங்களில் வரும் நிலையில் வரும் போதே உணவை சமைத்து எடுத்து வருகின்றனர் .