நூருல் ஹுதா உமர்
உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் அவர்களின் ஆலோசணைக்கிணங்க காரைதீவு பிரதேச பல்வேறுபட்ட உணவுகள் கையாளும் நிறுவனங்கள், மீன் விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள், உணவு கண்காட்சிகள், மற்றும் சமயஸ்தலங்களில் சித்திரை பண்டிகை காலத்தை முன்னிட்டு திடீர் பரிசோதனை இடம்பெற்று.
உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றன காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகளினால் இந்த கள பரிசோதனையில் பரிசோதிக்கப்பட்டது.
மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதர்களினால் இதன் போது உணவு மற்றும் நீரினால் பரவகூடிய நோய்கள் தொடர்பான விழிப்புணர்வும் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது.
Post a Comment
Post a Comment