காஸாவில் இருந்து ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலை தொடுத்தது. சுமார் 1200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. நூற்றுக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகவும் கஹமாஸ் பிடித்துச் சென்றது.
இதற்கு பதிலடியாக, ஹமாஸை ஒழித்துக்கட்டுவோம், ஒருவரையும் விடாமல் வேர் அறுப்போம் என சூளூரைத்த இஸ்ரேல் காஸா மீது போர் தொடுத்தது.
போர் தொடங்கியதில் இருந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றதுடன், காஸாவில் பூமிக்கடியில் ஹமாஸ் தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தும் பரந்த சுரங்கப்பாதை வலையமைப்பை அழித்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
பிபிசி வெரிஃபை (BBC Verify) இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை ஆய்வு செய்தது. இஸ்ரேலின் கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள ஆதாரங்களையும் ஆய்வு செய்தது.
அக்டோபர் 7 ஆம் தேதிக்கு முன்னர், காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுமார் 30 ஆயிரம் பேர் இருந்ததாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் தளபதிகளை மேற்கோள் காட்டி கூறப்பட்டது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா உட்பட பல மூத்த அரசியல் பிரமுகர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். ஆனால், அதன் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பலர் காஸாவிற்குள் இருப்பதாக நம்பப்படுகிறது.
போர் தொடங்கியதில் இருந்து சுமார் 13 ஆயிரம் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை கொன்றுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த தரவு எவ்வாறு சேகரிக்கப்பட்டது என்பதை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி ஆறு மாதங்களாகி விட்டன. இஸ்ரேலால் ஹமாஸை முழுமையாக ஒழிக்க முடிந்ததா?
ஹமாஸின் சுரங்கப்பாதை வலையமைப்பை பெருமளவில் அழித்துவிட்டதாக இஸ்ரேல் சொல்வது எந்தளவுக்கு உண்மை? பணயக் கைதிகளின் நிலைமை என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
Post a Comment
Post a Comment