இராணுவத்தினரால் முழுமையாக வீடு கட்டி ஒப்படைக்கப்பட்டது





-ஜே.எல். ஷாஜகான்- 

வயதுக்கு வந்த இரண்டு பெண்களுடன் வீடின்றி வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த ஏழைக்குடும்பமொன்றிட்கு இலங்கை இராணுவத்தினரால் முழுமையாக வீடு

கட்டி ஒப்படைக்கப்பட்டது.
-ஜே.எல். ஷாஜகான்-
இலங்கை ராணுவத்தினரால் மட்டக்களப்பு காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்ட வீடு செவ்வாய்க்கிழமை (02) மாலை திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் 11 ம் சிங்க ரெஜிமன்ட் படை அணியின் கட்டளை யிடும் அதிகாரி மேஜர் டி.எம்.என். பத்ம சிறீ அவர்களின் மேற்பார்வையில் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இராணுவ வீரர்களின் பங்களிப்பில் 243 வது காலாட் படை அணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் கே.எம்.எஸ். குமாரசிங்க அவர்களின் அழைப்பின் பேரில் 24 ஆவது காலாட் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திர ஸ்ரீ அவர்களினால் இந்த வீடு திறந்து வைக்கப்பட்டது.
சமயத் தலைவர்களின் பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து குறித்த வீடு திறந்து வைக்கப்பட்டு வீட்டின் பயனாளிடம் கையளிக்கப்பட்டது
இந்த வீடு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 167ஏ. வடக்கு கிராம சேவகர் பிரிவில் எம்.ஐ.மசாகிரா என்பவருக்கு இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 45 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீட்டின் நிர்மாண பணிகளை மிகவும் துரிதமாகவும் விரைவாகவும் இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர்