( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் வருடாந்த அமுலாக்க திட்டம்( follow me) என்ற நூல் வெளியீட்டுவிழா திட்டமிடல் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நுஸ்ரத் நிலோபரா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
பிரதமஅதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் செய்யட் உமர் மௌலானா கலந்து சிறப்பித்தார்.
இந்நூல் வெளியீட்டுவிழாவில் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான யசீர் அரபாத் மொகைடீன் ,திருமதி நிதர்சினி மகேந்திரகுமார், அப்துல் மஜீத், எச் .நைரூஸ்கான்,கோட்டக் கல்விப்பணிப்பாளர்களான ஏ.நசீர், பி.பரமதயாளன், யூஎல்.மகுமூட்லெவ்வை, கணக்காளர் சீ.திருப்பிரகாசம், ஆசிரியர் பயிற்சி நிலைய முகாமையாளர் எஸ்.சிவேந்திரன், பாடசாலை வேலைகள் அதிகாரி இ.ஏகாம்பரநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
வலய வருடாந்த அமுலாக்கத்திட்ட கைநூல் வெளியிட்டுவைக்கப்பட்டது.
விழாநிகழ்வுகளை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.
விழாவில் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் வளவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment