பாதணிகள் வழங்கி வைப்பு.





 நூருல் ஹுதா உமர் 


சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த 25 மாணவர்களுக்கு தனவந்தர்களின் பங்களிப்புடன் பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று (05) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல். ஜஃபரின் முயற்சியினால் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. அன்சார் உள்ளிட்ட பலரும்
கலந்து கொண்டனர்.