சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயம், காஸா நிதியத்திற்கு, நிதியைக் கையளித்தது




 


நூருல் ஹுதா உமர் 


அம்பாரை மாவட்டம், கல்முனை கல்வி வலய, வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் மற்றும் கல்முனை கல்வி வலய கணக்காளர் 
வை. ஹபீபுல்லாஹ் ஆகியோரின் வழிகாட்டலில் பலஸ்தீன் காஸா  சிறுவர்களின் ஜனாதிபதி நிதியத்துக்கு நிதிகள் கையளிக்கப்பட்டு வருகிறது. 

அதன் தொடரச்சியாக சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலய ஆசிரியர்களினால் 225,000/- இரண்டு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா வலயக்கல்வி அலுவலகத்தில் இன்று (01) பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார்  தலைமையில் கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் கலந்து கொண்டு வலயக்கல்வி  பணிமனையில் இந்த நிதியை கையளித்தனர்.