( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் வெட்டு வாய்க்கால் பகுதியில் தொழுநோய் கள ஆய்வு
இன்று (30) செவ்வாய்க்கிழமை நடாத்தப்பட்டது.
காரைதீவு சுகாதார உணவு அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தலைமையிலான சுகாதார குழுவினர் இன்று அப்பகுதியில் வீடு வீடாக விஜயம் செய்து ஆய்வு செய்தனர்.
இதில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தொழுநோய் கட்டுப்பாட்டு கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது ஏலவே இனங்காணப்பட்ட நான்கு தொழுநோயாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கையும் ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள் உரிய சிகிச்சை பெறாமல் இருந்து வந்தமை அவதானிக்கப்பட்டது.
Post a Comment