மருதமுனையில், மழைக்கு மத்தியில் மாலை வேளையில்




 


Rep/Fasmir

மருதமுனை பிரதான வீதியில் வாகன விபத்து; கார், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி ஒன்றுடன் ஒன்று மோதியதில் சிலர் வைத்தியசாலையில் அனுமதி

=====================================

(எமது செய்தியாளர்)


மட்டக்களப்பில் இருந்து நிந்தவூர் பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கார் வாகனம் இன்று (12) மாலை மருதமுனை பிரதான வீதியில் திரும்ப எத்தனித்த போது, குறித்து வீதியினால் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மோட்டார் சைக்கில், முச்சக்கர வண்டி, பஸ் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டது என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.


மோட்டார் சைக்கில், முச்சக்கர வண்டிகளில் வந்தவர்கள் விபத்தில் காயமடைந்து வைத்து சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


தற்போது, சீரற்ற காலநிலை நிலவுவதால் வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.