நூருல் ஹுதா உமர்
முஸ்லிம்கள் சார்பில் மிகப்பிரபல்யம் மிக்க இயக்கங்களில் ஒன்றான அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஏற்பாட்டில் தேவையுடைய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவரும் ‘அல்மா’ நிதியத்தின் உதவியுடன் ரமழானை முன்னிட்டு தேவையுடைய மக்களை அடையாளம்கண்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தில் 2024.04.06 ஆம் திகதி அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம்.ஐ.எம். றியாஸ் (அதிபர்) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின்போது அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் பிரதி தேசிய தலைவர்களான எஸ் . தஸ்தகீர், எம்.ஐ. உதுமலெவ்வை மற்றும் முன்னாள் திட்ட தவிசாளர் கே.எல். சுபைர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இவர்களுடன் அக்கரைப்பற்று, பாலமுனை, சவளக்கடை, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளி பிரதேச தலைவர்களும் கலந்து கொண்டனர்.
ரமழானை முன்னிட்டு தேவையுடைய மக்களை அடையாளம் கண்டு ‘அல்மா’ நிதியத்தின் உதவியுடன் சுமார் 4500 ரூபாய் பொறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வின்போது வை.எம்.எம்.ஏ. இன் பல்வேறுமட்ட உறுப்பினர்களும் உதவிகளை பெற்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment
Post a Comment