எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேலும் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து மதுபான நிலைய அனுமதிப் பத்திரங்களை (பார் லைசன்ஸ்) பெற்றுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்ற எம்.பி.க்கள் குழுவில் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி மற்றும் தென் மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள் அடங்குகின்றனர்.
அரசுக்கு உதவி செய்வதாக உறுதியளித்ததையடுத்து இந்த மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான தகவல்கள் அந்தந்த மாவட்ட விகாராதிபதிகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் ஏற்கனவே மதுபான உரிமங்களைப் பெற்றுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் இருநூறு புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக அண்மையில் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment
Post a Comment