" மரகதம்"





 மரகதம்" வரலாற்று நூல் வெளியீட்டு விழா

(வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர்  மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின்  "மரகதம்" வரலாற்று நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (16)சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

ஆலய பரிபாலன சபையின் ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தொகுத்து எழுதிய இந் நூல் வெளியீட்டு விழா
ஆலய சந்நிதானத்தில் ஆலய தலைவர் கலாநிதி கி. ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.

ஆன்மீக அதிதியாக இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் கலந்து சிறப்பித்தார்.

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ. கோபாலரெத்தினம்  கலந்து சிறப்பித்தார்.

ஆசியுரையை  ஆலய பிரதம குரு ஸ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்கள் வழங்கினார்.  வெளியிட்டுரையை நூலாசிரியர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.

 முதல் பிரதியை ஆலய தலைவர் கி.ஜெயசிறில் சுவாமி நீலமாதவானந்தா ஜீக்கு  வழங்கி வைத்தார். ஏனைய பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன  .