கையளிப்பு.





நூருல் ஹுதா உமர்

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 1991 தொடக்கம் 1996 வரை ஒரே வகுப்பில் (6G-11G) கல்வி கற்ற பழைய மாணவர்களின் அணுசரனையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட உதவி அதிபருக்கான
அலுவலக அறையை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு அண்மையில் 91G- 96G மாணவ சமூகத்தின் தலைவர் பொறியியளாளர் முஹமட் றிஸ்கான் தலைமையில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கல்முனை சாஹிராக் கல்லூரிக்கு உதவி அதிபருக்கான காரியாலயம் ஒன்றை புனர்நிர்மாணம் செய்து தருமாறு பாடசாலை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய  91G-96G மாணவ சமூகமானது  அக்காரியாலயத்தின் தேவைகளை கண்டறிந்து அதை தொழில் நிமிர்த்தம் வெளிநாடுகளில் வாழும்  வகுப்புத் தோழர்களின் உயர் பங்களிப்பில் சமார் 3 1/2  இலட்சம் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பாவனைக்கு கையளித்துள்ளனர். இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை சாஹிரா கல்லூரியில் பதியமிட்டோருக்கான கெளரவமும், விளைந்த பயிர்களின் மீளிணைவும் எனும் தொனிப்பொருளில் கடந்த 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 91G-96G  வகுப்பு மாணவர் சமூகம் பாடசாலை காலத்தில்  கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்களை வரவழைத்து கௌரவிக்கும் விழாவையும்  வெற்றிகரமாக நடத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.