சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்





வி.சுகிர்தகுமார் 0777113659 


 ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று (12) பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ந.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் வி.பபாகரன் கலந்து கொண்டு மகளிர் தினம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்ததுடன் விசேட அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்..சுபாகர் கலந்து கொண்டார். பெண்களில் முதலீடு செய்க! முன்னேற்றத்தை விரைவு படுத்துக எனும் 2024 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளுடன் வன்முறையற்ற சூழலும் மகிழ்ச்சியான குடும்பமும் எனும் தலைப்பில் பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி குணாளினி சிவராஜ் நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்டு விழிப்பூட்டல் கருத்துக்களை வழங்கினார். அவரது கருத்துரையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றிலிருந்து விடுபட்டு முன்னோக்கி செல்வது தொடர்பாகவும் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் பற்றியும் விளக்கமளித்தார். இதேநேரம் நிகழ்வில் கலந்து கொண்ட அக்கரைப்பற்று இலங்கை வங்கி முகாமையாளர் ர.ருதுசாந்தன் பெண்கள் அமைப்புக்களை வலுப்படுத்தி அதனூடாக கடன்களை வழங்கி பெண்களை சமூகத்தில் வளப்படுத்துவது தொடர்பாக விளக்கமளித்தார். அத்தோடு இலங்கை வங்கியில் பெண்களுக்கான பல்வேறு சுயதொழில் கடன் திட்டங்கள் வழங்கப்படுவதாகவும் இதனூடாக பெண்களை வலுப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இடம்பெற்ற நிகழ்வுகளில் சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.