கற்றல் உபகரணங்கள்,வழங்கி வைப்பு





 ( வி.ரி. சகாதேவராஜா)

மாளிகைக்காடடு கிராமத்தில் தந்தையை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.எம்.எம்.முஷாரப் வழங்கி வைத்தார்.

சமூக அபிவிருத்தி சபையின் 08 வது வருடாந்த நிறைவு விழா அதன் ஸ்தாபக தலைவரும் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் உதவித் தவிசாளருமான ஏ.எம்.ஜாஹீர் ஜே.பி. தலைமையில் இடம்பெற்றது .

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷார்ரப் கலந்து சிறப்பித்தார்.

 சிறப்பு அதிதிகளாக தொழில் அதிபர்களான எம்.எம்.ஆசாத் றஹீம் , 
 ஏ.ஏ. அஷ்ரப் அலி  கலந்து சிறப்பித்தார்கள்.

 இதன் போது சிறப்பு அதிதிகள் இருவருக்கும் அமைப்பின் பணிப்பாளர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

அதிதிகளுக்கு அமைப்பின் அங்கத்தவர்களினால் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. 
அத்துடன் தந்தையை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு
அமைப்பில் திறமையாக செயற்பட்டவர்களுக்கு கௌரவிப்பும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.