சிநேகபூர்வ சந்திப்பு





 (சர்ஜுன் லாபீர்)


அம்பாறை மாவட்ட திட்டமிடல் புதிய  பணிப்பாளர் எம்.ஏ முனாஸீர் அவர்களுக்கும்,அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று(14) அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கத் தலைவர் கபீர் கலீல் தலைமையில் இடம்பெற்ற இந் சந்திப்பில் அமைப்பின் செயலாளர் எம்.அரூஸ் இஹ்லாஸ் மாவட்ட இணைப்பாளர் எல்.எம் சர்ஜுன்,பிரதேச இணைப்பாளர் ஏ.சி பர்ஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்

இச் சந்திப்பில் மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவிருக்கும் எதிர்கால அரச திட்டங்களில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வகிபாகம்  மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சவால்கள் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.