#Rep/SukirathaKumar
40+ LPL சுற்றுப்போட்டி
அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேசங்களை உள்ளடக்கிய 40 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய லெஜன்ட் பிரிமிய லீக் சுற்றுத்தொடர் நேற்று (29) ஆரம்பமாகி இன்றும் இடம்பெற்று வருகின்றது.
ஆரம்ப நிகழ்வு திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றதுடன் இதில் சுப்பர் லெஜன்டஸ்; பிளாஷ் லெஜன்;டஸ்; லெஜன்ட் வோரியஸ் லெஜன்ட் ஸ்டார்ஸ் லெஜன்ட் கிங்கஸ் ஆகிய அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.
முன்னாள் முன்னணி வீரர்கள் இணைந்து ஏற்பாடு செய்த போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் முன்னாள் விளையாட்டு வீரரும் சுப்பர் அணி தலைவரும் நீதிபதியுமாகிய த.கருணாகரன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
பின்னர் அணிகளுக்கான சீருடை அறிமுகம் இடம்பெற்றது.
இதன் பின்னராக போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.
திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு மைதானம் மற்றும் பனங்காடு அக்னி விளையாட்டு மைதானம் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானம் ஆகிய மைதானங்களில் 29 30 31 ஆம் திகதி இடம்பெறுகின்ற போட்டிகளின் இறுதிப்போட்டி அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
10 ஓவர்களை கொண்ட 11 பேர் பங்கும் பற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி நிகழ்வுகளில் 60 இற்கும் மேற்பட்ட முன்னாள் வீரர்கள் பங்கேற்றுள்ளதுடன் முன்னாள் வீரர்களை ஒன்றிணைக்கும் சிறந்த செயற்பாடாகவும் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக போட்டிகள் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும்.
இத்தொடரின் போட்டி நிகழ்வுகள் இன்று பனங்காடு அக்னி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டிகளுக்கு அக்கரைப்பற்று நாதன்ஸ் மற்றும் அக்கரைப்பற்று மிஸ்டர் பிறைம் நிறுவனத்தினர் அனுசரணை வழங்கிவருகின்றனர்.
Post a Comment
Post a Comment