ஓய்வுபெறலும், ஒன்றுகூடலும்





 ( வி.ரி.சகாதேவராஜா)


ஓய்வுபெறும் கல்முனை தமிழ் பிரிவு கோட்டக் கல்விப்பணிப்பாளர் சண்முகம் சரவணமுத்துவிற்கான சேவைநலன் பாராட்டு விழாவும்,
 மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை  91/ 92 அணியினரின் ஆறாவது ஒன்று கூடலும் நேற்று  ஞாயிற்றுக்கிழமை(03)   பாண்டிருப்பில் இடம் பெற்றது.

 மட்டக்களப்பு ,அம்பாறை, திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த புலன அணி ஆசிரியர்கள் 50 பேர் இந்த ஒன்று கூடலிலும், பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டார்கள் .

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை 91/ 92 அணியினரின்ஆறாவது ஒன்றுகூடல் புலன அணியின் தலைவர் வீ.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.

ஓய்வுபெறும் கல்முனை தமிழ் பிரிவு கோட்டக் கல்விப்பணிப்பாளர் சண்முகம் சரவணமுத்துவிற்கான பாராட்டு கௌரவிப்பு விழா பொன்னாடை போர்த்தி இடம்பெற்றது.
 அனைவரும் தனது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

கவிமாமணி எஸ்.புண்ணியமூர்த்தி வாழ்த்துப்பா வாசித்தளித்தார். இடையே விநோத விளையாட்டு இடம்பெற்றது. பாடல்களை சோதி சுகுணா சுஷ்மிதா ஆகியோர் பாடினார்கள். டில்பிரபா கவிதை பாடினார். 
 
 திருகோணமலை புலன உறவுகளான சண்முகநாயகம் சசிகலா இந்திராணி நளினி கிரிஜா குமுதினி  ஆகியோர் வருகை தந்திருந்தார்கள் என்பதும் லண்டன் நண்டு நடா இணை அனுசரணை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.