சிறுநீரக நோய் தொடர்பான கண்காட்சி :




 


அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் சிறுநீரக நோய் தொடர்பான கண்காட்சி : டாக்டர் றிபாஸ் தொடங்கி வைத்தார்


நூருல் ஹுதா உமர்

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கான சிறுநீரக நோய் தொடர்பிலான கண்காட்சி அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் அம்பாறை பொது வைத்தியசாலை சிறுநீரக விசேட வைத்திய நிபுணர் திருமதி நியோமி அவர்களின் வழிகாட்டலில் அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தனுஷ் கவின் தலைமையில் இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த கண்காட்சியை வைபவரீதியாக திறந்து ஆரம்பித்து வைத்த இந்நிகழ்வில் பொத்துவில், அக்கரைப்பற்று, அம்பாறை, தெஹியத்தகண்டிய, மகாஓயா போன்ற பல்வேறு வைத்தியசாலைகளை சேர்ந்த வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் சிறுநீரக நோய் தொடர்பிலான தமது காட்சிப்பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர். அதில் சிறுநீரக தொழிற்பாடுகள், நோய் நிலைகள், குணப்படுத்த செய்யவேண்டிய மருத்துவ விடயங்கள் தொடர்பில் நிறைய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் அம்பாறை பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்திரஸ்ரீ உட்பட முக்கிய பிரமுகர்கள், மருத்துவ துறைசார் அதிகாரிகள், அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.