சிங்கள கற்கை பாடநெறி நிறைவு விழா




 


( வி.ரி. சகாதேவராஜா)


அரச கரும மொழிகள் திணைக்களத்தால் நடாத்தப்படுகின்ற 150 மணித்தியாலங்களைக் கொண்ட சிங்கள கற்கை பாடநெறி நிறைவு விழா  சம்மாந்துறையில் நேற்று முன்தினம் (10) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வு சம்மாந்துறை வலய சிங்கள பாட வளவாளர் ஏ.எச்.நாஸிக்அஹ்மத் தலைமையில் சம்மாந்துறை அல்அர்சத் மகாவித்தியாலயத்தில்  நடைபெற்றது.

 பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா, கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான பிஎம்வை.அறபாத், ஏஎல்.அப்துல் மஜீத், கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஏ.நஸீர், உதவிக் கல்விப்  பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, அதிபர் எம்ஏ.றஹீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

 சிங்கள கற்கை நெறியின் விரிவுரையாளர் சனத் ஜெயசிங்க கலந்து கொண்டு இரு மொழிகளிலும் உரையாற்றியதோடு அவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

 சம்மாந்துறை வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முகாமைத்துவ உதவியாளர்கள் என்று 106 பேர் இந்த 150 மணி நேர பயிற்சி நெறியில் கலந்து கொண்டு நிறைவு செய்துள்ளனர்.

பயிலுனர்களின் ஆடல் பாடல் நாடகம் என்பனவும் மேடையேறின.

விழா முழுக்க முழுக்க சிங்கள மொழியில் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.