திருக்கோவில், மெதடிஸ்தமிசன்மாணவரது உடலமானது, பிரேதப் பரிசோதனைகளுக்கென, சட்ட வைத்தியப் பொது நிபுணரிின் மேற்பார்வைக் கென, அம்பாரை பொது வைத்தியசாலைக்கு இன்று மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,
#Rep/Sukirthajumar.
மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட திருக்கோவில் மெதடிஸ்த மிசன் மகாவித்தியாலய மாணவன் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் மாணவர்கள் வைத்தியசாலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் இன்று (11) காலை இடம்பெற்றுள்ளதுடன் 16 வயதுடைய க.பொ.தராதரத்தில் கல்வி கற்கும் ஜெயகுமார் விதுர்ஜன் எனும் மாணவனே உயரிழந்துள்ளார்.
பாடசாலையில் இடம்பெறும் மரதன் ஓட்டத்தில் கலந்து கொண்ட குறித்த மாணவன் 6ஆவது நிலையில் ஓடிவந்துள்ளார். இந்நிலையில் இடைநடுவே அவருக்கு சற்று மயக்க நிலை ஏற்படவே பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு மூச்சுத்திணறல் ஏற்படவே திருக்கோவில் வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வண்டி சாரதி இல்லாத நிலையிலேயே அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி வரவழைக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
ஆயினும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் மாணவன் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை முன்பான ஒன்று திரண்ட பெருந்திரளான பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் திருக்கோவில் வைத்தியசாலையில் உரிய நேரத்தில உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் கோசம் எழுப்பினர்.
இதனால் பெரும் பதற்ற நிலை ஏற்படவே பொலிசார் இராணுவத்தினர் என பலர் குவிக்கப்பட்டு நிலைமையினை கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முயற்சித்தனர்.
இதேநேரம் மாணவனின் மரணம் தொடர்பிலான விசாரணையினை திருக்கோவில் பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலை பெயரளவில் கடந்த காலத்தில் தரமுயர்த்தப்பட்டாலும் ஆதார வைத்தியசாலைக்குரிய குறைந்த பட்ச வசதிகள் கூட இங்கில்லை என மக்கள் குற்றம்; சுமத்துவதுடன் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக தகுந்த சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோசம் எழுப்பினர்.
Post a Comment
Post a Comment