.சுகிர்தகுமார் 0777113659
வரையறுக்கப்பட்ட ஆலையடிவேம்பு கால்நடை பால் பண்ணையாளர் விவசாய கூட்டுறவுச்சங்க அக்கரைப்பற்று காரியாலய திறப்பு விழா இன்று (13) இடம்பெற்றது.
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான கட்டடமொன்றிலேயே இக்காரியாலயம் பல வருடகாலத்தின் பின்னர் அமைக்கப்பட்டு இன்று சம்பிhதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
சங்கத்தின் தலைவர் சி.விக்னேஸ்வரன் தலைமையில் சங்கத்தின் பிரத்தியேக செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.புஸ்பராஜாவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் ஆலையடிவேம்பு பிரதேச கால் நடை வைத்திய அதிகாரி திருமதி ரி.கோகுலதாஸ் மற்றும் சமுர்த்தி முகாமையாளர் சீலன் ஆலய தலைவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு விசேட பூஜைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து அதிதிகள் இணைந்து காரியாலயத்தினை திறந்து வைத்தனர்.
இங்கு தலைமை உரையாற்றிய சங்கத்தின் பிரத்தியேக செயலாளர் சோ.புஸ்பராஜா கால்நடை பால் பண்ணையாளர் விவசாய கூட்டுறவுச்சங்கத்திற்கான காரியாலயம் திறக்கப்பட்டதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். மேய்;ச்சல் தரை தொடர்பில் பண்ணையாளர்கள் எதிர்கொண்ட சவால்கள் அவற்றை முறியடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கினார்.
மேலும் மேய்ச்சல் தரை என பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அரசு உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கிய ஆவணங்கள் நீதிமன்றங்களின் தொடரப்பட்ட வழக்குகள் போன்ற விடயங்களை தெளிவு படுத்தியதுடன் ஆயிரக்கணக்கான கால்நடைகள் மேய்வதற்கும் பராமரிப்பதற்கும் உரியதாக இருக்கும் வட்டமடு மேய்ச்சல் தரையினை பாதுகாப்பது சமூகங்களை கடந்து அனைவரது கடமை எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் களவாடப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டதுமான கால்நடைகளின் இழப்புகளுக்கு அரசு இதுவரை உரிய நட்டஈடு வழங்காமையினையும் சுட்டிக்காட்டினார்.
இதேநேரம் மேய்ச்சல் தரை தொடர்பான ஆவணங்களின் பிரதிகள் அடங்கிய ஆவண புத்தகங்களை திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரின் பிரதிநிதி ஆகியோரிடம் ஒப்படைத்தார்.
இறுதியாக பிரதேச கால் நடை வைத்திய அதிகாரி மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

Post a Comment
Post a Comment